Thursday, July 11, 2019

இ.பி.எப்., அலுவலகத்தில் 2,189 பணியிடங்கள்

எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்டு ஆர்கனிசேஷன் என்பது இ.பி.எப்.ஓ., என அறியப்படுகிறது. இதில் சோசியல் செக்யூரிடி அசிஸ்டென்ட் பிரிவில் 2189 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 21.7.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி ஒர்க்கில் ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் எழுத்துக்களை டைப் செய்யும் திறன் தேவைப்படும்.

இதர தேவை: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக கம்ப்யூட்டர் டிரெய்னிங் சான்றிதழ் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.

கடைசி நாள்: 2019 ஜூலை 21.

விபரங்களுக்கு: https://ibpsonline.ibps.in/epfssaojun19/

No comments:

Post a Comment